Damini App – மின்னல் தாக்கத்திலிருந்து உங்களை காப்பாற்றும் இந்திய அரசு செயலி
Damini App – மின்னல் தாக்கத்திலிருந்து உங்களை காப்பாற்றும் இந்திய அரசு செயலி
மின்னல் தாக்கம் இந்தியாவில் ஆண்டுதோறும் பல உயிர்களை பறிக்கிறது. இதனைத் தடுக்கும் நோக்கில் இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் (IITM), புனே, மற்றும் புவி அமைப்பு அறிவியல் அமைப்பு (ESSO) இணைந்து உருவாக்கியிருக்கின்றன “Damini – Lightning Alert App” எனும் செயலியை.
Damini App என்ன செய்கிறது?
இந்த இலவச மொபைல் செயலி உங்கள் GPS இருப்பிடத்தின் அடிப்படையில் மின்னல் தாக்கம் நிகழ வாய்ப்பு இருப்பதை 30 முதல் 45 நிமிடங்களுக்கு முன்பே எச்சரிக்கையாக தெரிவிக்கிறது.
பயனர்கள் தங்களின் அருகிலுள்ள மின்னல் தாக்க நிலையை வரைபடத்தில் நேரடியாக பார்க்க முடியும்.
இந்த செயலி எவ்வாறு இயங்குகிறது?
IITM நிறுவனம் நாடு முழுவதும் 48 மின்னல் சென்சார்களை நிறுவியுள்ளது.
இவை சேகரிக்கும் தகவல்கள் புனேயில் உள்ள மைய சேவையகத்திற்குச் செலுத்தப்படுகின்றன.
இதன் மூலம் பயனர்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் (சுமார் 35–40 கி.மீ. தூரத்திற்குள்) மின்னல் தாக்கம் ஏற்படும் இடங்களை நேரடியாக அறிந்து கொள்ளலாம்.
👁 Views: 7
Comments
Sindhu
2025-10-12 20:49:36
Super
Leave a comment