அன்பார்ந்த அண்டம்பள்ளம் கிராம ஊர் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.

நம்முடைய அண்டம்பள்ளம் கிராமத்திலேயே எழுந்தருளி இருக்கக்கூடிய ஸ்ரீ வேம்புலியம்மன் மற்றும் முத்துமாரியம்மனுக்காக குதிரை வாங்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தின் அடிப்படையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை அதாவது முப்பது பதினொன்று இரண்டாயிரத்து இருபத்தி ஐந்து ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக பத்து மணியளவில் நம்முடைய மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு அனைத்துப் பகுதி பொதுமக்களும் வருகை புரிந்து அதாவது அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் அண்டம்பள்ளம் கிராம முக்கியஸ்தர்கள், காப்புதாரர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் வருகை புரிந்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்குபெற்று நம்முடைய கிராமத்திற்கு குதிரை வாங்குவதற்கு ஏற்பாடு செய்து தர தங்களை அன்போடு அழைக்கிறார்கள். இடம் மாரியம்மன் கோவில் வளாகம். நாள் வருகிற ஞாயிற்றுக்கிழமை. ஆகவே அனைவரும் வருகை புரிந்து இந்தக் குதிரை வாங்குவதற்கு ஏற்பாடு செய்து தரும்படி தங்களை அன்போடு அழைக்கிறார்கள்

இங்கனம்:-

அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் கிராம பொது மக்கள் இந்தச் செய்தியினை அனைத்து வாட்சாப் குழுகளுக்கும் பகிரப்பட்டு உதவும்படி அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்மேலும் இது தவிர தண்டோரா மூலம் அனைத்து பகுதிகளுக்கும் ஒளிபரப்பு முயற்சித்து வருகிறார்கள் நன்றி வணக்கம்.