திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு 200 சொகுசு பஸ்கள் இதுகுறித்து, விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் வெளியிட்ட அறிக்கை:
சென்னை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, நாகர்கோவில், கோவை, துாத்துக்குடி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, திருவண்ணா மலைக்கு, 200 சொகுசு விரைவு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் வெளியிட்ட அறிக்கை:
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை சென்று வர வசதியாக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் மட்டும், சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு, 160 சொகுசு, 'ஏசி' பஸ்கள், டிச., 3, 4ம் தேதிகளில் இயக்கப்படும்.
இதேபோல, நாகர்கோவில், திருநெல்வேலி, துாத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோவையில் இருந்தும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சொகுசு மற்றும் படுக்கை வசதி உள்ள, 'ஏசி' சொகுசு பஸ்கள், டிச., 2, 3ம் தேதிகளில் இயக்கப்பட உள்ளன. மொத்தம், 200க்கும் மேற்பட்ட விரைவு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணியர் www.tnstc.in மற்றும் அதன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம்.
பஸ் இயக்கம் குறித்து,
மதுரை - 9445014426
திருநெல்வேலி - 9445014428
நாகர்கோவில் - 9445014432
துாத்துக்குடி - 9445014430
கோவை - 9445014435
சென்னை - 9445014463, 9445014424 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.